மாணவர்கள் தெளிவுடன் இருக்கிறார்கள் - நீட் கையெழுத்து இயக்கம் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ..!

Udhayanidhi Stalin DMK NEET Supreme Court of India
By Karthick Jan 02, 2024 10:47 AM GMT
Report

நீட் கையெழுத்து இயக்கத்தை தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசு மிக தீவிரமாக முன்னெடுத்தது.

நீட் தேர்வும் - விலக்கும்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டுவரப்படத்தில் துவங்கி அவ்வப்போது மாணவர்களின் தற்கொலை சம்பவம் நடந்து வருகின்றது. 2021-ஆம் ஆண்டின் தேர்தலின் போது, நீட் தேர்வு விலக்கு ரகசியம் தெரியும் என்று கூறி வாக்குகளை ஈர்த்தது திமுக.

sc-dismisses-case-against-neet-signature-movement

ஆட்சி பொறுப்பேற்று தற்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தி.மு கழக அரசின் நீட் விலகிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்று தான், நீட் கையெழுத்து இயக்கம்.

sc-dismisses-case-against-neet-signature-movement

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி வந்த இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டு துவங்கி வைத்தார். 50 நாளில் 50 லட்ச கையெழுத்து என்ற இலக்குடன் துவங்கப்பட்ட இந்த இயக்கம், நிறைவுபெற்று மத்திய அரசிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தள்ளுபடி

இந்த சூழலில் தான் டெல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த கையெழுத்து இயக்கம் மாணவர்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

sc-dismisses-case-against-neet-signature-movement

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த காலத்தில் மாணவர்கள் மிகவும் தெளிவாகவும், விழிப்புடணும் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.