கன்னடத்தில் ஒரு போதும் பேச மாட்டேன்; எஸ்பிஐ ஊழியர் கொதிப்பு - வீடியோ வைரல்

Viral Video Karnataka
By Sumathi May 21, 2025 06:25 AM GMT
Report

எஸ்பிஐ ஊழியர் கன்னடத்தில் பேச மாட்டேன் என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஊழியர் காட்டம்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார்.

கன்னடத்தில் ஒரு போதும் பேச மாட்டேன்; எஸ்பிஐ ஊழியர் கொதிப்பு - வீடியோ வைரல் | Sbi Employee Refuses Speak Kannada Viral Video

அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என சொல்ல, அந்த வங்கி மேலாளரோ, “நான் ஒரு போதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன்” என அவரிடம் கூறியிருக்கிறார்.

23 வயதில் 25 ஆண்களை திருமணம் செய்த பெண் - பகீர் பின்னணி

23 வயதில் 25 ஆண்களை திருமணம் செய்த பெண் - பகீர் பின்னணி

வைரல் வீடியோ 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வட மாநில இளைஞர் ஒருவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் இந்தியில் பேச,

தனது தாய் மொழியான கன்னடத்தில் பேச வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.