ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் சவுக்கு சங்கர் ? - கேள்வி எழுப்பும் திமுக

Rajiv Gandhi DMK
By Irumporai Jan 27, 2023 10:22 AM GMT
Report

 ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் சவுக்கு சங்கருக்கு என்ன வேலை என்று  திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கேள்விஎழுப்பியுள்ளார்.

டிஆர்பி ராஜா

திமுகவின் ஐ. டி. விங்க் பிரிவு தலைமை நிர்வாகியும் , மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பதிவில் அண்ணே.. குஜராத் கலவரம் BBC Documentary வந்து பத்து நாள் ஆச்சு. 2nd part கூட வந்துருச்சு. தமிழ் ட்ரான்ஸ்லேசன் /சப் டைடில்னு எதாவது பண்ணுங்க என்று எழுதி பதிவிட்டு இருந்தார்.

ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் சவுக்கு சங்கர் ? - கேள்வி எழுப்பும் திமுக | Savuku Shankar Eps Meeting Admk

 இதற்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், இன்னும் இந்த அப்பாவி இஸ்லாமியர்கள் திமுகவை நம்புகிறார்கள். பாவம் என்று தெரிவித்துள்ளார்.

சாயம் வெளுத்து போச்சு 

அதற்கு, திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, ‘’இஸ்லாமி‌யர்கள் உயிராக மதிக்கும் நபிகள் நாயகத்தை கேவலமாக பேசி சிறைக்கு போனவன நண்பனா வச்சிகிற உங்களை நம்பும் அளவுக்கு இஸ்லாமிய மக்கள் இல்லை’’என்கிறார். அவர் மேலும், ‘’உங்கள் சாயம் வெளுத்து ரெம்ப நாள் ஆச்சு சவுக்குசங்கர்’’ என்கிறார்

பின்னர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டரில் மற்றொரு பதிவில் :

எடப்பாடி பழனிசாமி வாழ்க கோசம் பலமா இருக்கு போல. அதிமுக ஈரோடு இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை சவுக்குசங்கர்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் சவுக்கு சங்கர் ? - கேள்வி எழுப்பும் திமுக | Savuku Shankar Eps Meeting Admk

அதிமுக கூட்டத்தில் சவுக்கு சங்கர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஈரோட்டில் இரண்டு நாட்களாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி நடத்தி அவரும் அந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பங்கேற்றதை புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.

ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் சவுக்கு சங்கர் ? - கேள்வி எழுப்பும் திமுக | Savuku Shankar Eps Meeting Admk

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.