பாஜகவில் இணைந்தாரா சவுக்கு சங்கர் : பரபரப்பில் பாஜக

BJP K. Annamalai
By Irumporai Mar 07, 2023 11:50 AM GMT
Report

தன்னை குறித்து அவதூறாக திமுக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரபரப்புவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 சவுக்கு சங்கர்

பாஜகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினை சேர்ந்த முக்கியமான இரண்டு நபர்கள் கட்சியினை விட்டு விலகியதன் காரணமாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. அதில், மிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள் கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன.

பாஜகவில் இணைந்தாரா சவுக்கு சங்கர் : பரபரப்பில் பாஜக | Savuku Shankar Complaint To Police Bjp

நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாரளமாக வெளியேறிக்கொள்ளுங்கள். ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

சவுக்கு சங்கர் அறிக்கை

 பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்குப் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டிய நிபந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படையில் தமிழக பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

இந்த நிலையில் இந்த போலி அறிக்கை தொடர்பாக போலீசில் புகார் அளித்திருப்பதாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த போலி அறிக்கை திமுக தகவல் தொழில்நுட்ப அணியால் பரபரப்பப்படுவதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் போலி அறிக்கை வெளியிட்ட பிரவீன் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.