சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு
சமூக ஊடகங்களில் அரசியல் சார்ந்த விமர்சனங்களை கூறி வருபவர் சவுக்கு சங்கர் , அவரது அரசியல் சார்ந்த கருத்துக்கள் சில எப்போதும் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊடகம் சார்ந்த வழக்கு ஒன்றில் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்படும் என பேசப்பட்டது. இந்த நிலையில் ட்விட்டரில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து ட்வீட் செய்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது உயர் நீதி மன்றக் கிளை அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆகவே சவுக்கு சங்கர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டில், அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.