பேராசிரியர் மேடையில் பேசும் போது கலைஞர் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்
தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர். பெயர் மட்டுமல்ல இவரின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோரு வகையில் பாடமாகவே இருக்கிறது கருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, திமுக இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்தது.
1972ல் எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க. உருவானது. 1993ல் வைகோ தலைமையில் கட்சி பிளவைச் சந்தித்தது. இந்த இரண்டு பிரிவுகளை மீறியும், கட்சி பலவீனமடையாமல் காப்பாற்றி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும் .
சிறந்த இலக்கியவாதி, சிறந்த திரைக் காதசிரியர், சிறந்த எழுத்தாளர், அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் புகழப்படும் கலைஞர் கருணாநிதியின் வரலாற்றின் பக்கங்கள் சிலவற்றை விவரிக்கின்றார் விமர்சகர் சவுக்கு சங்கர்.