வாயை கொடுத்து வம்பில் சிக்கிய சவுக்கு சங்கர் - விரைவில் கைதாக வாய்ப்பு?

DMK Tamil Nadu Police
By Thahir Jun 18, 2023 07:39 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தன்னை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் கைதாக வாய்ப்பு?

யூடியூப்பர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தனியார் யூடியூப் சேனல்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

savukku shankar will be arrest soon

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக கருத்துகளை தெரிவித்த நிலையில், சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலை சவுக்கு சங்கரே வெளியிட்டுள்ளார்.

அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு 

அதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் அவதுாறாக பேசியதாக எஸ்பியின் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சுந்தரவதனம் தீவிரமாக உதவினார். தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததோடு உண்மையான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் இரண்டு நாட்களில் வெளியே வர உதவியுள்ளார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றால் இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் சுந்தரவதனத்தின் பெயரும் இடம்பெறும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டதற்கு எதிராக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.