சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு .. நீதிமன்றம் வைத்த நிபந்தனை ?

By Irumporai Nov 19, 2022 05:58 AM GMT
Report

நீதிபதிகள் குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் விடுதலை 

பின்னர் சவுக்கு சங்கர் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கொரி உச்சா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு .. நீதிமன்றம் வைத்த நிபந்தனை ? | Savukku Shankar Released From Cuddalore

இந்த நிலையில்சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கடந்த 11-ஆம் கைது செய்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  

வெளியில் பேசக்கூடாது

மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்கியும் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்

அதன்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன் ஜாமீன் நிபந்தனைகளை பிறப்பித்துள்ளார்.

அதில், சவுக்கு சங்கர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிடகூடாது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சங்கர் ஆஜராக வேண்டும். நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சங்கர் தெரிவிக்கக் கூடாது. 20,000 ரூபாய் மதிப்புள்ள இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளார்.