மதுரை சிறையில் இருந்து மாற்றப்பட்ட சவுக்கு சங்கர் : காரணம் என்ன?
By Irumporai
ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக சவுக்கு சங்கருக்கு நேற்று ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் சிறைக்கு மாற்றம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்க்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவு கடலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாகவும் நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகவும் மத்திய சிறை துறை தகவல் தெரிவித்துள்ளன.
பரபரப்பான விவகாரம்
மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றப்பட்ட விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது