சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம் : சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு

By Irumporai 1 மாதம் முன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர்

சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உடல்நிலையில் பின்னடைவு

இந்த நிலையில், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் இதுவரை அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை எனவும், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்ணாவிரதம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு அவர் அளித்த கடிதத்தை அவர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.