சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மறுப்பு - சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவு!
திருச்சி வழக்கில் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர்
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக கோவை சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றப்பட்டு, தற்போது புழல் சிறையில் உள்ளார்.
சொந்த ஜாமீன்
இந்நிலையில், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சியில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை கூடுதல் மகிளா கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஜெயபிரதா முன்னிலையில் வந்தது. அப்போது அவர், வுக்கு சங்கருக்கு (திருச்சியில் தொடரப்பட்ட வழககில் மட்டும்) நீதிமன்ற காவல் வழங்க மாஜிஸ்திரேட்டு மறுத்து, சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் கமலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'அரசு பதில் அளிக்காமல், விசாரணை அடிப்படையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
எனவே, தற்போது ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் (நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட) டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.