மே 18 கூட்டம் தடை செய்யப்பட்ட பரபரப்பு பின்னணி!
இலங்கையில் நடைபெற்ற போரில் 2009ஆம் ஆண்டு தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையிலும் இலங்கை அரசு மீது ஐ.நா.வில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நடந்து வந்தது.
அப்போதே பல கெடுபிடிகளும் விதிக்கப்பட்டன. மெரினா கடற்கரையில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் , தமிழகத்தில் தற்போது திமுக அரசு ஆட்சியமைத்துள்ளது, பொதுவாகவே இலங்கை தமிழ்ரக்ள் அவர்களின் போரட்டங்க்ளுக்கு ஆரம்ப காலம் முதலே நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என திமுக அரசு கூறிவந்த நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்துள்ளது.
இதன் காரணம் என்ன இதன் பின்புலத்தில் உலக அரசியல் உள்ளதா? இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அரசியல் ரீதியிலான உறவுகள் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை எப்படி உள்ளது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஐபிசி தமிழ் நெறியாளர் லியோ ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு மெய்பொருள் நிகழ்ச்சியின் மூலம் பதில் அளிக்கின்றார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.