OPS-ஐ நீக்குவதற்கு தான் பொதுக்குழு - அத அவர்கிட்ட ஏன் சொல்லணும்?

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 25, 2022 10:07 AM GMT
Report

கடந்த ஜூன் 14-ம் தேதி, அதிமுக பொதுக்குழு தொடர்பாக விவாதிக்க நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பற்றவைக்கப்பட்ட ஒற்றைத் தலைமை தீப்பொறி பற்றியெரிந்துகொண்டிருக்கிறது.

கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகக் களமிறங்கி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றத் தயாராக,

ஏற்கெனவே பேசிமுடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் தடை வாங்கியது. தொடர்ந்து,

பொதுக் குழுவில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக அறிவித்தார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். ஓ.பி.எஸ் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார். ஓ.பி.எஸ் வெளியேறும்போது சிலர் வாட்டர் பாட்டில்களை வீசும் காட்சிகளையும் தமிழ்நாடு கண்டது.

முதன்முறை இருவரும் தேர்தெடுக்கப்படும்போதே ஐந்தாண்டுகளுக்குப் பதவிக்காலம் இருக்கும் வகையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில், 2022 செப்டம்பர் வரைக்கும் அவர்களுக்கான பதவிக்காலம் இருக்கிறது.

இந்நிலையில் அதிமுக-வில் ஓபிஎஸ் எதிர்காலம் குறித்து விளக்கும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரின் நேர்காணல் இதோ...