ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் - பிரதமர் மோடிக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள்
இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுக மற்றும் அதிமுக தான் ஆளும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.மேலும் பேசிய அவர் தற்போது தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என பேசினார்.
மேலும் அவர் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழ தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர்.
பிரதமர் மோடி ஈழ தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.