கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பினார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்.
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த மாதம் 28 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கங்குலிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உயிர்கொல்லி வகையான ஒமைக்ரான் தொற்று இல்லை என்றும், கோவிட்-19 இன் டெல்டா பிளஸ் மாறுபாடு என்றும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கங்குலிக்கு உட்லேண்ட்ஸ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளதா என மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில், சவுரவ் கங்குலி கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.
மேலும், சில நாட்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2021 தொடக்கத்தில் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.