கழிவறையில் தயாரிக்கப்பட்ட சமோசா...விவரம் தெரியாமல் 30 ஆண்டுகளாக வாங்கிய மக்கள்
சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா உள்பட பலகாரங்களை தயார் செய்த உணவகம் பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் அங்குள்ள ஜெட்டா நகரில் ஷாவார்மா உணவு விடுதியில் எலி ஒன்று அலைந்து கொண்டு இறைச்சியை சாப்பிட்டு கொண்டும் இருந்துள்ளது. பிரபல உணவு விடுதியில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி தரும் அந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் கொந்தளித்து அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்ட அதிகாரிகள் 43 உணவகங்கள் விதிமீறல்கள் ஈடுபட்டதை கண்டறிந்தன. அவற்றில் 26 உணவகங்கள் மூடப்பட்டன.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதில் கடந்த 30 ஆண்டாக அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் இருந்ததால் அந்த உணவகம் மூடப்பட்டு உள்ளது.