திடீரென உடைந்த ராட்சத ராட்டினம்; 3 பேர் கவலைக்கிடம் - வைரலாகும் வீடியோ!
ராட்டினம் திடீரென உடைந்ததில் 23 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
உடைந்த ராட்டினம்
சவூதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில், 360 டிகிரி ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது.
தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில், ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் திடீரென உடைந்து, நேர் எதிரில் இருந்த இரு முனைகளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அந்தரத்தில் இருந்து ராட்டினம் தரையில் விழுந்ததில், பயணிகள் அலறி துடித்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
3 பேர் கவலைக்கிடம்
3 பேர் கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Video: Screams, Prayers As Saudi Amusement Park Ride Crashes On Camera https://t.co/LFSKXq80Bq pic.twitter.com/qMFdMMBGTZ
— NDTV WORLD (@NDTVWORLD) July 31, 2025
இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.