சவூதி புரோ லீக் கால்பந்து தொடர் - முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய ரொனால்டோ அணி வெற்றி...!
சவூதி புரோ லீக் கால்பந்து தொடரில், முதல் போட்டியிலேயே ரொனால்டோ அணி வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சவூதி புரோ லீக் கால்பந்து தொடர்
கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளத்துடன் சவூதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் கிளப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்துள்ளார். இதனையடுத்து, சவூதி அரேபியாவில் உள்நாட்டு கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் முதல் போட்டியில் சவூதி புரோ லீக்கில் அல் நாசர் - எட்டிஃபாக் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ரியாத் நகரில் கிங் சவூத் யூனிவெர்சிட்டி மைதானத்தில் நேற்று நடந்தது.
இப்போட்டியில் ரொனால்டோ அல்-நாசர் அணியின் மஞ்சள் நிற ஆடை அணிந்து களத்தில் இறங்கினார். அதேபோல், ரொனால்டோவின் ரசிகர்களும் மஞ்சள் நிற ஆடை அணிந்து மைதானத்தில் குவிந்தனர். பார்ப்பதற்கு மைதானமே மஞ்சள் கடல் போல் காட்சியளித்தது.
ரொனால்டோ அணி வெற்றி
ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய சவூதி புரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காகத் தனது முதல் ஆட்டத்தில் ரொனால்டோ களத்தில் இறங்கினார்.
இப்போட்டியின் அல் எட்டிஃபாக் அணிக்கு எதிராக சவூதி ப்ரோ லீக் ஆட்டத்தில், 31வது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் நடுக்கள வீரரான ஆண்டர்சன் தலிஸ்கா முதல் கோலை அடித்து அசத்தினார். இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி.1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Talisca heads home Al Nassr's opener ⚽️
— Roshn Saudi League (@SPL_EN) January 22, 2023
The cross, just, evaded Ronaldo's leap ?#RoshnSaudiLeague | @AlNassrFC_EN | @Ettifaq_EN pic.twitter.com/SbCYaLNN1C
+3! ?
— AlNassr FC (@AlNassrFC_EN) January 22, 2023
And still on ? pic.twitter.com/QMERaYNs6W
7️⃣ ? 9️⃣4️⃣ https://t.co/ipnh1gRzY5 pic.twitter.com/FOJ5wA1YcY
— AlNassr FC (@AlNassrFC_EN) January 22, 2023