மாணவர்கள் லீவ் எடுத்தால் பெற்றோருக்கு சிறை தண்டனை - அரசு அதிரடி உத்தரவு!

Saudi Arabia World
By Vinothini Aug 27, 2023 08:00 AM GMT
Report

பள்ளி மாணவர்கள் லீவு போட்டால் பெற்றோருக்கு தான் சிறை தண்டனை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

லீவ் எடுக்கக்கூடாது

சவுதி அரேபியாவில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு மாணவர் 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை என்றால் அந்த மாணவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சகம் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

saudi-government-shocking-announcement

இந்த வழக்கறிஞர் அலுவலகம் குழந்தை பள்ளிக்கு செல்லாததற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து இது தொடர்பான அறிக்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு உத்தரவு

இந்நிலையில், இந்த விசாரணையின் போது மாணவர் பள்ளிக்கு வராததற்கு பாதுகாவலர் அல்லது பெற்றோரின் அலட்சியம் தான் காரணம் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கலாம் என்று கூறியுள்ளது.

saudi-government-shocking-announcement

மேலும், பள்ளியில் ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முன்கூட்டியே பள்ளியில் இருந்து பெற்றோர்களுக்கு இந்த தண்டனை குறித்து எச்சரிக்கை விடப்பட வேண்டும் எனவும் அரசின் சார்பில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.