வெள்ளத்தில் மூழு்கிய சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரம் - 2 பேர் உயிரிழப்பு

Saudi Arabia
By Thahir Nov 26, 2022 07:41 AM GMT
Report

சவுதி அரேபியாவில் விடாமல் கொட்டிய மழையால் ஜித்தா மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜித்தா 

சவுதி அரோபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று ஜித்தா. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை என்பது வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஜித்தா மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் 965 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜித்தாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஏராளமான கார்கள் சேதமாகியுள்ளது.

Saudi Arabia

சாலைகளில் வெள்ள நீரானது கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேசாமான வானிலை, கடுமையான மழை மற்றும் ஜித்தா விமான நிலையத்தில் தேங்கிய வெள்ள நீரால் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.