இந்தியா வரும் சவுதி இளவரசர் : வருகையின் நோக்கம் இதுதான் ?
சவுதி அரேபிய இளவரசர் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி 20 மாநாடு
ஜி -20 மாநாடு அடுத்த மாதம் 15, 16 தேதிகளில் இந்தோனேசியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கு பெற சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கலந்துகொள்ள உள்ளார். அதே சமயம் வரும் வழியில் இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது .

கடந்த மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பினை ஏற்று சவுதி இளவரசர் வர உள்ளதாக கூறப்படுகிறது.இளவரசரின் இந்திய வருகையின் போது இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி இளவரசர் இந்தியா வருகை
இந்தியாவை பொருத்தவரை வியபாரத்தில் சவுதி 4 வது பெரிய நாடாக உள்ளது , இந்தியா தனக்கு தேவையான எரிப்பொருட்களில் 18 சதவீதம் சவுதியிலிருந்தே இறக்குமதி செய்கிறது, உக்ரைன் ரஷ்யா போர் உச்சத்தில் உள்ள நிலையில் சவுதி இளவரசரின் பயணம் முகியமானதாக பார்க்கப்படுகிறது.