சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமனம்...!

Saudi Arabia
By Nandhini Sep 28, 2022 06:17 AM GMT
Report

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, அந்நாட்டின் பிரதமராக சவுதி மன்னர் சல்மான் நியமித்துள்ளார்.

இது குறித்து சவுதி மன்னர் சல்மான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் -

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, அந்நாட்டின் பிரதமராகவும், தனது 2-வது மகன், இளவரசர் காலித்தை பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் மாநில அமைச்சராக நியமிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, சல்மான்தான் நாட்டின் அதிகாரம் மிக்க தலைவராக இருந்த நிலையில் தற்போது இது முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சமூகவலைத்தளங்களில் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள இளவரசர் முகமது பின் சல்மானிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

saudi-arabia-mohammed-bin-salman-al-saud