இங்கு 12 நாள்களில் 17 பேருக்கு மரண தண்டனை - ஐநா கவலை!
சவுதியில் கடந்த 12 நாள்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை
சவுதியில் நிகழ்த்தப்படும் மரண தண்டனைக்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இங்கு 12 நாட்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், 15பேர் போதை பொருள் பயன்பாட்டிற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில், சவுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மூவர், ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் இருவர், சிரியாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐநா வேதனை
2022 ஆம் ஆண்டில் மட்டும் 139 பேருக்கு சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 2021ல் இந்த எண்ணிக்கை 69 ஆக இருந்தது. கொரோனா தொடங்கிய 2020ல் 27 பேருக்கும், 2019ல் 187 பேருக்கும் தண்டமை அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளுக்கு தந்த வாக்குறுதிகளை மீறி சவுதி மரண தண்டனையை தொடர்ந்து நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.