கோவிலை பாதுகாக்க ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் போதும் : ஆலோசனை கூறும் சத்குரு
த்குரு, காடுகளை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அது என்னுடைய சொந்த இடம். ஒரு இன்ச் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதை நிரூபித்து விட்டால் நாட்டை விட்டே சென்று விடுவேன் என ஆவேசமாக பேசினார். இதையடுத்து கோவில்களை பாதுகாப்பது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்குரு, கோவில்களை நிர்வகிக்க முறையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
சாதி மதம் பாராமல் அவை இருக்க வேண்டும். அரசு இதை கவனத்தில் கொண்டு பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
மேலும் மிஸ்டு கால் இயக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு வழி தான்.
7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் ஒரு சில கோடி மக்கள் மிஸ்டு கால் கொடுத்தாலே அரசியல் கட்சிகள் அதை கவனிக்கும் என விளக்கம் அளித்தார்.