சனிக்கிழமை விரதம் இருங்க; கேன்சர் செல் செத்துரும் - அண்ணாமலை தகவல்
சனிக்கிழமை விரதம் இருந்தால் கேன்சர் செல் செத்து போயிவிடும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை விரதம்
புதுவையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாஜக இளைஞர் அணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு,

சுவாமி விவேகானந்தர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
இப்போ எங்க பார்த்தாலும் கேன்சர். மாமா வீட்டுக்கு போனா கேன்சர். சித்தப்பா வீட்டுக்கு போன கேன்சர்ன்னு தான் சொல்றாங்க.. ஆனால் பெயர் மட்டும்தான் வேறு வேறுன்னு சொல்றாங்க. என்ன பெயரன்ன்னு கேட்டால் நமக்கே புதுசா இருக்கு.
கேன்சர் செல்
24 மணி நேரம் விரதம் இருந்தால் கேன்சர் செல்லுக்கு போகும் எனர்ஜியை கட் பண்ணினால் கேன்சர் செல் செத்துவிடும். சஷ்டி விரதம் 7 நாட்கள் இருந்தீர்கள் என்றால் உடம்பில் ஒன்னு இரண்டு கேன்சர் செல் இருந்தால் கூட செத்து போய்விடும்.
எல்லார் உடம்பிலும் கேன்சர் இருக்குதுங்கய்யா. இங்கே இருக்கின்ற எல்லார் உடம்பிலேயும் கேன்சர் செல் இல்லைன்னு இல்லை. அந்த செல்கள் அதிகமாகும் போது தான் கேன்சர் என்ற நோய் ஏற்படுகிறது. சின்ன சின்ன கேன்சர் செல் அங்கே அங்கே ஒளிந்து இருக்கும். நமக்கு தெரியாது.
ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2.. ஸ்டேஜ் 3, 4ன்னு அது பரவும் போது தான் கேன்சராக மாறுகிறது. இத்தனை நாள் நாம என்ன செய்தோம். செவ்வாய்க்கிழமை ஆனால் ஒரு நாள் வாரந்தோறும் விரதம் இருப்பாங்க. ஒருநாள் சாப்பிட மாட்டாங்க.
அப்படி சாப்பிடாமல் இருந்தால் கேன்சர் செல் இருந்தால் செத்து போயிடும். சனிக்கிழமை சாப்பிடாதீங்க. கேன்சர் செல் செத்து போயிடும் எனத் தெரிவித்துள்ளார்.