சாத்தூர் வெடிவிபத்து: கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான பதிவு
விருதுநகரின் சாத்தூர் அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில், 19 பேர் உடல்கருகி பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 80 சதவீத காயத்துடன் பலரும் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை விருதுநகர் அருகே காக்கிவாடன்பட்டியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு வெடிகள் வெடித்து சிதறிக் கொண்டிருந்ததால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதையை பதிவிட்டுள்ளார்.
மனிதர்கள்
— வைரமுத்து (@Vairamuthu) February 13, 2021
பட்டாசுகளை வெடிப்பதுபோய் -
பட்டாசுகள்
மனிதர்களை வெடிப்பது துயரமானது.
அதனினும் பெருந்துயரம்
மனித உயிர்களின் விலை
சில லட்சங்கள் ஆகிப்போவது.