பட்டாசு ஆலை வெடி விபத்து: 60 பேரின் நிலை என்ன?

By Fathima Apr 13, 2026 06:47 AM GMT
Report

விருதுநகரின் மடத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது, இதில் சுமார் 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இன்று காலை எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறியது, இதன்போது உள்ள 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பட்டாசு ஆலை வெடி விபத்து: 60 பேரின் நிலை என்ன? | Sattur Fire Factory Accident  

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்தும் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து வருவதால் முழுமையாக தீயை அணைந்த பின்னரே சேதங்கள் குறித்து தெரியவரும்.

விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

பட்டாசு ஆலை வெடி விபத்து: 60 பேரின் நிலை என்ன? | Sattur Fire Factory Accident