பதில் கேட்டு சொந்த 'மகளிடம்' மரண கலாய் வாங்கிய நடிகர் சதீஷ் - இணையத்தில் வீடியோ வைரல்!

Tamil Cinema Actors Sathish Tamil Actors
By Jiyath Aug 10, 2023 02:27 AM GMT
Report

நடிகர் சதீஷ் தனது மகளின் கியூட்டான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

நடிகர் சதீஷ்

ஆரம்ப காலத்தில் குறும்படங்களில் நடித்த நடிகர் சதீஷ் பின்னர் கடந்த 2010ம் ஆண்டு வெளியான 'தமிழ்ப் படம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் அவர் மதராசப்பட்டினம் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

பதில் கேட்டு சொந்த

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய் என அனைவருடனும் காமெடியில் கலக்கியிருப்பார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் நிஹாரிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

சதீஷ் தனது மகளின் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவில் சதீஷ் மகளிடம் கேள்வி கேட்க அதற்கு எதிர்த்து க்யூட்டாக பதில் சொல்லும் வீடியோ ட்விட்டரில் வைரலாகிறது.

மகளின் பதில்

அந்த வீடியோவில் ' யோகட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சதீஷின் மகள் அதை தன்னுடைய கைகள் கால்களில் தேய்த்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து சதீஷ் சாப்பிடுவதற்கு தானே யோகட் கேட்ட? இதுதான் நீ சாப்பிடற லட்சணமா? என்று கேட்க, அதற்கு அந்த குழந்தை சதீஷிடம் திருப்பி சாப்பிடுற லட்சணமா? என்று சொல்கிறது.

பதில் கேட்டு சொந்த

அதைத்தொடர்ந்து சதீஷ் பதில் சொல்லு என்று அதட்டுவது போன்று நடிக்க, அதற்கு "பதில்" என்று பதிலடி கொடுக்கிறது. அதைத் தொடர்ந்து சதீஷ் இனிமே இதே மாதிரி பண்ணுவியா? என்று கேட்க, பண்ணுவேன் என்று தன்னுடைய கால்களில் யோகடை தடவிக் கொண்டே இருக்கிறது.

மேலும் அந்த குழந்தையிடம் சதீஷ் அப்பா எப்படி அடிப்பேன் தெரியுமா? என்று மிரட்டுவது போன்று, பதில் சொல்லுடி என்று கேட்க," பதில்..பதில் பதில் என்று பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.