4 வருடங்களாக கோமாவில் உள்ள சத்யராஜ் மனைவி - மகள் திவ்யா உருக்கமான பதிவு

Sathyaraj Tamil Cinema Tamil Actors
By Karthikraja Nov 11, 2024 08:30 AM GMT
Report

என் அம்மா 4 வருடங்களாக கோமாவில் உள்ளதாக சத்யராஜ் மகள் தெரிவித்துள்ளார்.

திவ்யா சத்யராஜ்

பிரபல நடிகர் சத்யராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். சிபிராஜ், சினிமாவில் நடித்து வருகிறார். 

sathyaraj wife maheshwari

சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். மேலும், மகிழ்மதி என்கிற இயக்கம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார் திவ்யா சத்யராஜ்.

கோமாவில் அம்மா

இந்நிலையில், தனது தாய் குறித்த பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் தனது அப்பா சத்யராஜின் படத்தை பகிர்ந்து என் தந்தை பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கடந்த 4 வருடங்களாக என் அம்மா கோமாவில் இருக்கிறார். அவர் வீட்டில்தான் இருக்கிறார். PEG டியூப் வழியாகதான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். அம்மா திரும்ப கிடைப்பார் என எங்களுக்கு தெரியும். 

அப்பா கடந்த 4 வருடங்களாக single parent ஆக இருக்கிறார். அப்பாவின் அம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நானும் அவருக்கு ஒரு single mom ஆக இருக்கிறேன். அப்பாவும் நானும் POWERFUL SINGLE MOMS CLUBஐ உருவாக்கி உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.