தயாரிப்பாளர்கள் ஹீரோவின் நடிப்பை பாருங்க... ஜோசியம் பார்க்காதீங்க... - சத்யராஜ் பேச்சு..!

Sathyaraj Tamil Cinema
By Nandhini Feb 24, 2023 09:42 AM GMT
Report

தயாரிப்பாளர்கள் ஜோசியம் பார்த்து படம் எடுக்கக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில், இளம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் சத்யராஜ்.

இப்படத்தில் ஹீரோவாக பிரதீப் நடித்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. 

sathyaraj-indian-actor-tamil-cinema

ஜோசியம் பார்க்காதீங்க... - சத்யராஜ்

தயாரிப்பாளர்கள் ஜோசியம் பார்த்து படம் எடுக்கக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ‘தீர்க்கதரிசி’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், படத்தின் ஹீரோ, வில்லன் எல்லாமே கதைதான். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்களுக்கு சினிமா பற்றி தெரிந்திருப்பது அவசியம். ஜோசியம் பார்த்து படம் எடுக்க சினிமாவிற்கு வரக்கூடாது. ஹீரோவின் தகுதிக்கேற்ப காட்சிகளை வைக்க வேண்டும் என்று பேசினார்.