ஈழத் தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து உழைப்பார் : நடிகர் சத்யராஜ் அறிக்கை
ஈழத் தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து உழைப்பார் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திவ்யா
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பிரபலமான டாக்டர் ஆவார் ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார்உடல்நலம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திவ்யா இலங்கை நாட்டில் வடக்கு மாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமை பள்ளி, வடக்கு பசுமை சமுதாயம் என்கிற பெயரில் என் மகள் திவ்யாவும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரகாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
ஈழ மக்களுக்காக
இதுகுறித்து சத்யாராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஈழத் தமிழர்களுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தநேரத்தில், எம்.ஜி.ஆரின், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்றும் மகிழ்ந்து பதிவு செய்திருந்தார்.
பழநெடுமாறான் வாழ்த்து
சத்யராஜின் இந்த அறிக்கைக்கு மூத்த தலைவர் பழநெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தாங்கள் தங்கள் மகள் திவ்யா ஈழத்தமிழர்களுக்கு ஆற்றி வரும் தொண்டினை அறிந்து பெற்ற தந்தை என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்பது இயற்கையே.
உங்களுக்கு பெருமையை பெற்று தருவது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. திவ்யாவின் தொண்டு பெருகட்டும் ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார்.