விஜய் கட்சியில் முக்கிய பதவி - தவெகவில் இணைவது குறித்து பேசிய சத்யராஜ்

Karthikraja
in பிரபலங்கள்Report this article
விஜய்யின் தவெக கட்சியில் இணைவது குறித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி தனது கொள்கைகளை அறிவித்தார்.
விஜய்யின் அரசியல் வருகை, கட்சியில் இணைவது குறித்து திரைப் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சத்யராஜ்
இந்நிலையில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ஜீப்ரா திரைப்படம் நவம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில், நடிகர் சத்யராஜிடம் விஜய்யின் கட்சியிலிருந்து அழைப்பு வந்தால் எந்த பதவி கேட்பீர்கள் என கேள்வி கேட்டபோது, "கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்பேன். பெரியாரின் கொள்கைகளை பரப்பும் பதவி எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். நம்ம விஜய் தான அதெல்லாம் கேட்டால் குடுப்பார்" என கூறினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தவெக மாநாடு குறித்து கேட்கப்பட்ட போது, "விஜயை நான் சின்ன வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். இவ்வளவு தூரம் வந்து மேடையில் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய கொள்கை தலைவர் பெரியார் என்று சொன்னதில் எங்களுக்கு எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி" என பதிலளித்தார்.