வாக்கு சதவீதம் அறிவிப்பில் குளறுபடி? இது தான் காரணம்! சத்ய பிரத சாகு விளக்கம்
வாக்கு சதவீதம் அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஒரே கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 69.94% பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட போது, 72.09 % வாக்கு சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை பின்னர் தேர்தல் ஆணையமே திருத்தியது. இது குறித்து பல விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இது தான் காரணம்
இந்நிலையில், இந்த சிக்கல் குறித்த விளக்கத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது வருமாறு, வாக்கு சதவீதம் செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் கணக்கிடப்பட்டதால் தவறு நடந்தது.
வாக்குச்சாவடி அலுவலர்களும் செயலியில் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் அளிக்கப்படவில்லை. ஆகையால், ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். அதனால், வாக்குப்பதிவு சதவீத கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது.
வாக்கு மையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக தகவல் வெளிவந்தது.