உதயநிதி கட்சி கொடியினை பயன்படுத்தியது குறித்து கவனத்தில் எடுக்கப்படும்- சத்ய பிரதா சாகு
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது - தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக திருநெல்வேலியில் 20.98% வாக்குகள் பதிவாகியுள்ளது, சென்னையில் 23.67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஆவடி சட்டமன்ற தொகுதியில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அதிமுகவிற்கு வாக்கு விழுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு ஆவடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து புகார் வரவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், பூத் சிலிப் வாக்களிக்க கட்டாயம் இல்லை.
உதயநிதி ஸ்டாலின் வாக்களிக்கும் போது கட்சி கொடியினை சட்டையில் பயன்படுத்தியது குறித்து கவனத்தில் எடுத்துகொள்ளப்படும் சத்ய பிரத சாஹூ என்றார்.