தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: சத்யபிரதா சாகு

election tamilnadu vote sathya pratha sahoo
By Jon Mar 24, 2021 03:29 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர் இருக்கிறார்கள். பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்க முடியும். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.