கருத்துக் கணிப்புகளுக்கு தடை - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

india election sathya pratha polls
By Jon Mar 26, 2021 11:58 AM GMT
Report

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

நாளை அசாமிலும், மேற்கு வங்கத்திலும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான கருத்து கணிப்புகளை மேற்கொள்ளவும் முடிவுகளை வெளியிடவும் இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் தற்போது விதித்திருக்கிறது.

கருத்துக் கணிப்புகளுக்கு தடை - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு | Sathya Pratha Sahoo Election Commission India

  இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - கன்னியாகுமரி இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6ம் தேதி காலை 7 – இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிடுவதற்காக வரையறைகள் அறிவிக்கப்படுகிறது.

அசாம், மேற்கு வங்கத்தில் 27ம் (நாளை) தேதி காலை 7 மணியில் இருந்து இரவு 7.30 வரை கருத்துக் கணிப்புகள் வெளியிடக் கூடாது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்பு கருத்துக் கணிப்புகளையோ அல்லது பிறவாக்கு ஆய்வு முடிவுகளையோ காட்சிப்படுத்தக் கூடாது என்று குறிப்பிறப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.