தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் எப்போது முடிகிறது? சத்யபிரதா சாகு பதில்
election
tamilnadu
pratha
shaoo
By Jon
ஏப்ரல் 4ம் தேதி 2 மணிநேரம் பிரச்சாரத்திற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
எப்போதும் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் பரப்புரை மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றுவிடும். தற்போது அனைத்து கட்சிகளுக்கும் மேலும் 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.