2 மாதங்களுக்கு பின்பு சதுரகிரி கோவில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது.
மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
இந்த சூழலில் கொரோனா காரணமாக இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை புரிய கடந்த சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் செப் 18 ஆம் தேதி சனி பிரதோஷம் மற்றும் 20 ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிய வேண்டுகோள் விடுத்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்தது.
இந்நிலையில் இரண்டரை மாதங்களுக்குப் பின்பு பிரசித்திபெற்ற சதுரகிரி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் IBC Tamil

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
