11 வயதில் இருந்தே ஆசை... ஒலிம்பிக் கனவுடன் காத்திருக்கும் தமிழக வீரர் ...

Sathiyan gnanasekaran Table tennis Tokyo Olympics
By Petchi Avudaiappan Jul 01, 2021 04:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 117 வீரர்கள் 18 வகையிலான விளையாட்டில் விளையாட உள்ளனர். இதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார். சத்யனின் அம்மா மலர்கொடி, வேணுகோபால் சந்திரசேகரின் டேபிள் டென்னிஸ் அகாடமியில் சத்யனை பயிற்சிக்காக சேர்த்துள்ளார்.

11 வயதில் இருந்தே ஆசை... ஒலிம்பிக் கனவுடன் காத்திருக்கும் தமிழக வீரர் ... | Sathiyan Gnanasekaran Participate In Tokyo Olympic

அப்போது அவருக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். ஒலிம்பிக்கில் விளையாட வேண்டுமென்பது எனது கனவு. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கை பார்த்த போது இந்தியாவுக்காக நானும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என விரும்பினேன் என்று கனவு கண்டபோது அவருக்கு வயது 11 தான். கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு சத்யனின் கனவு பலித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற இளையோர் காமன்வெல்த் விளையாட்டுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியதன் மூலம் சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை சத்யன் தொடங்கினார்.

தொடந்து 2011 ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸில் அவர் இடம் பெற்ற அணி பதக்கம் வென்றது. தொடர்ந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் விளையாடும் நோக்கில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரின் தந்தையின் மரணச் செய்தி வந்தது.

11 வயதில் இருந்தே ஆசை... ஒலிம்பிக் கனவுடன் காத்திருக்கும் தமிழக வீரர் ... | Sathiyan Gnanasekaran Participate In Tokyo Olympic

அதன்பிறகு 2016 பெல்ஜியம் ஓபன் தொடரின் டைட்டிலில் கிடைத்த வெற்றி. தொடர்ந்து 2017இல் ஸ்பேனிஷ் ஓபன் வெற்றி, 2018 காமன் வெல்த் விளையாட்டில் மூன்று பதக்கம், அந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கிடைத்த வெண்கலம், 2019 இல் சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடேரேஷன் நடத்திய இரண்டு தொடர்களில் பதக்கம், 2020 ஹங்கேரியில் இரட்டையர் பிரிவில் வெள்ளி என வெற்றி மீது வெற்றிகளை குவித்தார். 

கடுமையாகஉழைத்தால், வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளதாக சத்யன் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

அவரது கனவு பலித்திட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.