யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா? - தர்ஷா குப்தா ஆவேசம்...!

Sathish
By Nandhini Nov 12, 2022 06:53 AM GMT
Report

யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா? என்று ஆடை குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் சதீஷை நடிகை தர்ஷா குப்தா சாடியுள்ளார்.

உடை குறித்து நடிகர் சதீஷின் சர்ச்சை பேச்சு

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழில் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இப்படத்தில் சன்னி லியோன் பேயாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ் மும்பையிலிருந்து வந்த நடிகை சன்னி லியோன், நம் கலாச்சாரத்தின் சேலையை அணிந்து வந்திருக்கிறார். நம்ம கோயம்புத்தூர் பெண் தர்ஷா குப்தாவின் டிரெஸையும் பாருங்கள் என்று மேடையிலேயே பலர் முன்னிலையில் அவர் உடையை குறித்து பேசியுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

sathish-dharsha-gupta

சதீஷின் விளக்கம்

இந்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த நடிகர் சதீஷ், என்னை அப்படி பேசச் சொன்னதே தர்ஷாதான் என்று தெரிவித்தார்.

சன்னிலியோன் சேலையிலும், தான் கவர்ச்சி உடையிலும் வந்தது அதிர்ச்சியாக உள்ளது. இதை மேடையில் நீங்கள் பேசுங்கள் என்று சொன்னதாலேயே நான் அப்படி பேசினேன் என்று கூறினார்.
ஆவேசம் அடைந்த தர்ஷா

இதைக் கேட்டதும் தர்ஷா கடும் கோபம் அடைந்துள்ளார். இதனையடுத்து தர்ஷா கடுமையாக சதீஷை சாடி இருக்கிறார். இது குறித்து தர்ஷா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், "இந்த பிரச்சினையை சதீஷ், என்பக்கம் திருப்பி விடுவது முறையல்ல. நான் உங்களிடம் அப்படி பேசுங்கள் என்று சொன்னேனா? ரொம்ப விசித்திரமாக உள்ளது.

யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா? மேடையில் சன்னி லியோன் உடையையும், நான் அணிந்து வந்த உடையையும் ஒப்பிட்டு சதீஷ் பேசியது அப்போதே என்னை காயப்படுத்தியது. அப்போது அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி சொல்வது சரியல்ல' என்று பதிவிட்டுள்ளார்.