சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : சிபிஐ கொடுத்த அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 2020 - ம் ஆண்டு ஜூன் மாதம் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தனர். இந்த சமபவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்தியது.
சிபிஐ விசாரணை
காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக புகார் அளித்ததை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ரத்தக் கறை படிந்த கைலிகள்
இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில் காவல்துறையின் தாக்குதலில் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் காவல்துறை வீசியதாக குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.