தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு - காவலர் பரபரப்பு வாக்குமூலம்
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீஸார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியதையடுத்து பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கொலை வழக்காக பதிவு செய்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் உள்பட 9 போலீஸாா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
நீதிபதி பத்மநாபன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி கிளை சிறை காவலர் மாரிமுத்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
அந்த வாக்குமூலத்தில் அவர் கூறுகையில், தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் சாத்தான்குளத்திலிருந்து வரும்போதே காயத்துடன் வந்தார்கள். பிறகு கிளை சிறையிலிருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர்களை போலீசார் முத்துராஜா மற்றும் செல்லத்துரை ஆகியோர் அழைத்து சென்றார்கள் என்றார். இதனையடுத்து, இந்த வழக்கு வருகிற 29-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.