முதலமைச்சர் சாஸ்திரா ஆக்கிரமிப்பை அகற்றினால், அது அவருக்கு மணிமகுடம் - Savukku Shankar interview

By Irumporai May 01, 2022 05:42 AM GMT
Report

தஞ்சை அருகில் உள்ள திருமலை சமுத்திரத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த அரசு நிலங்களை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் திருப்பித்தர வேண்டும் என்றும், அக்டோபர் 3-ம் தேதிக்குள் அந்நிலத்தை விட்டு சாஸ்திரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இன்றளவும் அந்த உத்தரவை சிறிதும் மதிக்காமல் வெளியேற மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த 2018, அக்டோபர் 3-ம் தேதியுடன் உயர் நீதிமன்ற உத்தரவின் காலக்கெடு முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து அப்போதைய வட்டாட்சியர் அருணகிரி பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டங்களை அளவிடும் பணியைத் தொடங்கினார்.

தற்போது வரை பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களுக்குக் கல்வியை வழங்குவதால், அரசு நிலத்தைத் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துவந்தது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

ஆனால், பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது மார்ச் மாதம் 24-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனச் சொல்லியிருப்பதால் நிர்வாகம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது அனைவரின் கேள்வியாக  உள்ளது . 

இந்த நிலையில் சாஸ்த்ரா கல்லூரி நில ஆக்கிரமிப்பு அக்கற்றபடுமா அதனை தற்போது ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் எந்த வகையில் நடவடிக்கை எடுப்பார். விளக்குகின்றார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ந்மது ஐபிசி தமிழ் - ல் 

[