சசிகுமாருடன் நடிக்கும் பிக்பாஸ் நடிகை: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Sasikumar
By Petchi Avudaiappan
சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது
நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இந்த நிலையில் அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் நடிக்க உள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தை சிங்கம்-2, மோகினி, தேவ் போன்ற புதிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் சசிகுமாருடன் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.