Thursday, Jul 3, 2025

12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராகும் பிரபல நடிகர்...ஹீரோ இவர்தான்..!

Sasikumar
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராகும் பிரபல நடிகர்...ஹீரோ இவர்தான்..! | Sasikumar Back To Direction

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெய், சுவாதி நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முக கலைஞனாக அறிமுகமானவர் சசிகுமார். இந்த படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் பட வரிசையில் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ஈசன் படத்தை இயக்கியிருந்தார். 

அதன்பின் முழுநேர நடிப்பு பக்கம் திரும்பிய சசிகுமார்  நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் பல படங்களில் நடித்து வரும் அவர் வெப்சீரிஸ் ஒன்றின் மூலம் மீண்டும் இயக்குநராக உள்ளதாக கூறப்படுகிறது. 

12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராகும் பிரபல நடிகர்...ஹீரோ இவர்தான்..! | Sasikumar Back To Direction

குற்றப் பரம்பரை நாவலின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸை எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த தொடரில் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிகுமார் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.