தனுஷுடன் ஏற்பட்ட மோதல் - ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் விளக்கம்
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பட்ட மோதல் பற்றி தயாரிப்பாளர் சசிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இந்தப் படம் ஓடிடி வெளியீடு என்று முடிவானதிலிருந்தே தயாரிப்பாளர் சசிகாந்த் - தனுஷ் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனிடையே இது தொடர்பாக நான் எந்தவொரு கருத்தும் சொன்னதில்லை என்றும், நெகட்டிவ் பக்கம் இல்லாமல் நாம் தயாரித்துள்ள படம் உலக அளவில் போகப் போகிறது என்பதில் மட்டுமே இருக்கிறேன் என்றும் சசிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படம் சுமார் 200 மில்லியன் சந்தாதாரர்களைப் போய்ச் சேரப் போகிறது. நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இந்தப் பட விவகாரத்தில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷும் இந்தப் படத்தின் நல்லதுக்குதான் பேசினார் என்றும் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.