போயஸ் கார்டனுக்கு வருகை தந்த சசிகலா
sasikala
garden
ammk
boise
By Jon
சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது புதிய இல்லத்தின் கட்டுமான பணிகளை சசிகலா பார்வையிட்டார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். அந்த இல்லத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் இன்று பிற்பகல் போயஸ் கார்டன் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் விவேக் ஆகியோர் இல்லத்தின் கட்டுமான பணிகளை நேரடியாக பார்வையிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த இல்லத்தை பார்வையிட்ட சசிகலா அதன் பின்னர் புறப்பட்டு சென்றார்.