எலிசபெத் ராணி மறைவை அடுத்து சசிகலா சுற்றுப்பயணம் மாற்றம்
V. K. Sasikala
Queen Elizabeth II
By Thahir
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவை அடுத்து வி.கே.சசிகலா சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம் மாற்றம்
இங்கிலாந்து ராணி (96) உடல்நலக்குறைவு நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், எலிசபெத் ராணியின் இறுதி சடங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு பின் தான் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் நாளை மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் வரும் 12 மற்றும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.