நாளை தமிழகம் வருகிறார் சசிகலா: எங்கு தங்கவிருக்கிறார்?
hospital
jail
amma
By Jon
பெங்களூருவிலிருந்து நாளை தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் அண்ணன் மகளான கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, சாலை மார்க்கமாக நாளை தமிழகம் திரும்புகிறார்.
இங்கு வந்ததும் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணண் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சசிகலா தங்கவிருக்கிறாராம். அவர் தங்குவதற்காக, அந்த வீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருந்தபடியே கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திப்பதற்காக வீட்டின் முகப்பு வாயிலில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.