சசிகலா விலக இது தான் காரணம்.! திருமாவளவன் பதில்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள்ளும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுகவுடனான பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டாததால் திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், திருமாவளவன், “திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை.
திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து பயணிக்கும். மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பொருத்தமற்ற கேள்வி ” என்றார்.
தொடர்ந்து சசிகலா அரசியலில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “பாஜகவின் நெருக்கடிக்கு ஆட்பட்டு சசிகலா அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்திருக்கலாம்” என்று கூறினார்.